Friday, May 27, 2016

வறட்சி பாதித்த கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க உதவும் விமானம்

வறட்சி பாதித்த 11 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக அளவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநில அரசுகளும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு உதவும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது 11வது ஆண்டை நினைவுப்படுத்து விதமாக கிராமங்களுக்கு தண்ணீர் வழங்க முடிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா பகுதியைச் சேர்ந்த 11 கிராமங்களுக்கு தினசரி 71,500 லிட்டர் குடிநீரை வழங்க தன்னார்வ நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக நேற்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.   

No comments:

Post a Comment

Annanagar Daily posts