Friday, March 25, 2016

30 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வெட்டப்பட்டது

சென்னை மாநகராட்சி 129 வது வட்டம் 10 வது மண்டலத்திற்க்குட்பட்ட பாஸ்கர் காலனி சிறுவர் பூங்கா எதிரே உள்ள நடைபாதையில் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த இயல்வாகை, வாத நாராயணன் மரங்கள் கடந்த 21.03.2016 உலக வணதினம் நாளன்று வெட்டப்பட்டது. இது சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நடைபாதையில் வளர்ந்த இரண்டு மரங்கள் மாநகராட்சி ஊழியர்களால் அடியோடு அகற்றப்பட்டது. தற்போது தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தும் பொது இடத்தில் உள்ள மரம் அகற்றது. உலக வணதினம் அன்று அரசு பொதுமக்களிடம் மரம் வளர்ப்பதற்கு விழிப்புணர்வு செய்து வரும்போது இது போன்ற காரியங்கள் பொதுமக்களின் இடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts