Monday, 5 January 2015

ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேரில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7வது மண்டலத்திற்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேரில் உள்ள நியாய விலைக்கடையில். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்ட நிகழ்ச்சி திருவள்ளூவர் மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பிரிவு அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் அகியோர் பயணாளிகளுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்கள் அருகில் சட்டசபை உறுப்பினர் எஸ்.வேதாச்சலம், அதிமுக கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வி.அலெக்சாண்டர், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், அம்பத்தூர் நகர செயலாளர் என்.அய்யனார், நகர தலைவர் வி.எஸ்.ரவி மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts