Friday 29 June 2012

ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்வு


ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் கடந்த ஜுன் 28.06.2012 வியாழக்கிழமை அன்று உறுப்புதான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம், மோகன் பவுண்டேஷனுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக நடிகையும் சமூகசேவகியுமான ரோகிணி அவர்கள் கலந்து கொண்டார்.

 அவர் தம் சிறப்புரையில், மாணவிகளின் எதிர்கால வாழ்வினை வளமாக்கும் நற்கருத்துகளை நல்கினார். மோகன் பவுண்டேஷனின் ஒருங்கி ணைப்பாளர் டாக்டர்.சுமணா நவீன் மற்றும் பல்லுறுப்புதான ஒருங்கி ணைப்பாளர் செல்வி.சிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டனர். உறுப்புதானம் எவ்வாறு செய்யலாம்? அதற்குரிய நடைமுறைகள் என்ன? எந்தெந்த உறுப்புகளைத் தானம் செய்ய இயலும்? என்ற கேள்விகளுக்கு விடையளித்து விரிவாகப் பேசியதுடன் கணினிப்படத்தின் வழியும் நன்கு விளக்கினர். அடுத்து பேசிய ராஜீவ்காந்தி
 அரசுமருத்துவமனையின் மருத்துவப்பேராசிரியர் டாக்டர்.அமலோற்பவநாதன், மூளைச்சாவு குறித்தும் உறுப்புதானம் செய்வதால் பல உயிர்களைப் பிழைக்கவைக்க முடியும், விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதன் தேவை ஆகிய பல செய்திகளைக் கனிணிப் படத்தின் மூலம் விளக்கிக் கூறினார்.

 இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர். ரி.றி.மாலதிஸ்ரீ மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர். மு.கிரிஜா ஆகியோர் தங்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கு உறுதி அளித்தனர். நாட்டுநலப்பணித்திட்டத்தின் சிறப்புமுகாமில் கலந்துகொண்ட மாணவிகளுக்குச் சான்றிதழ்களைச் சிறப்புவிருந்தினர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் ரி.றி.மாலதிஸ்ரீ, டாக்டர். மு.கிரிஜா ஆகியோர் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts