Friday, 24 June 2011

திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தை ஒதுக்கும் பேருந்துகள்

அண்ணாநகர் பஸ் டிப்போ நிறுத்தத்தை தாண்டி ரவுண்டாணா செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் திருமங்கலம் சிக்னலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் நேரே சென்று இரண்டாவது சிக்னலில் திரும்புவதற்குப் பதிலாக, முந்தைய சிக்னலிருந்து பதினைந்தாவது மொயின் ரோடில் பிரிந்து, பதிமூன்றாவது மேயின் ரோடு வழியாக இரண்டாவது அவின்யூ சாலையை அடைந்து நேரே ரவுண்டாணா நோக்கி செல்கின்றன.

இதனால் திருமங்கலம் வாட்டர் டேங்க் நிறுத்தத்தை தவிர்த்து அந்த பேருந்துகள் செல்வதால், பேருந்து நிறுத்ததததில் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

சரியான ரூட்டில் பேருந்துகள் சென்று, பயணிகளை ஏற்றிக் செல்ல பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். செய்வார்களா?

No comments:

Post a Comment

Annanagar Daily posts