![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqPiVg-vqUtBY210Tr2gqrMoe0DsO_OVvIuqp67toEpcO7Avz-eB-tKaFngby5gBmIjmlPmzcpsOeV7Z0xHbZ1g8jrGIFSldBs4_kUpbkGmjZna2qsLnLsdi2yHXvqqnuHymJYCIFUJqpR/s400/E.jpg)
அண்ணாநகர் புனித லுக்காஸ் பங்கைச் சேர்ந்த புனித அந்தோணியார் அன்பியம் சார்பில் திருமங்கலம் டி.வி.நகரில் உள்ள முன்னாள் அன்பியத் தலைவர் எஸ்.ஏ.சத்தியநாதன் இல்லத்தில் தவக்கால திருப்பலி நடைபெற்றது. ஆரம்பத்தில் ஆண்டவருடைய திருப்பாடுகள், சிலுவைப்பாதை நடைபெற்றது.
அதை தொடர்ந்து புனித லு£க்காஸ் ஆலய பங்குத்தந்தை அருட்திரு கிரகோரி எஸ்.எஸ்.பி. திருப்பலி நிறைவேற்றி வைத்தார்.திருப்பலியில் மையக்கருத்தாக "ஊதாரி மகன் உமமை தனது குற்றங்களை, பாவங்களை விட்டு திரும்பியது போல் நாமும் நமது பாவங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும்" என வலியுறுத்தி சொல்லபட்டது. பங்குத்தந்தை அருட்திரு கிரகோரி எஸ்.எஸ்.பி.க்கு எஸ்.ஏ.சத்தியநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்த திருப்பலியில் புனித அந்தோணியார் அன்பியத்தலைவர் அருள்தாஸ், துணைத்தலைவர் சாம்சன், பொருளாளர் ஏ.ஜேக்கப் மற்றும் அன்பியமக்களும், கோல்டன் ஜார்ஜ் நகர் பங்கை சேர்ந்த குழந்தை இயேசு அன்பியத்தை சேர்ந்த ஆரோக்கிய சகாயராஜா, பிரசில்லா எடல், அமலபுஷ்பம், சந்தான சாலமன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அன்பியத்தலைவர் அருள்தாஸ் நன்றி கூறினார். அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது..
No comments:
Post a Comment