சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 04.11.2025 அன்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் மார்சி / ஏப்ரல் 2026-ல் நடைபெறவுள்ள இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு(Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டு, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான பணி ஆய்வினை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு.பி.சந்தர மோகன் இ.ஆ.ப., ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மரு.ஆர்த்தி இ.ஆ.ப., மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் திரு.சுதன் இ.ஆ.ப., பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் பி.குப்புசாமி, தொடக்ககல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ், அரசுத் தேர்வுகள் இயக்குநர் திருமதி.கே.சசிகலா மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment