Sunday, 1 July 2018

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் பிரக்னாநந்தா மிகச் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை

 சதுரங்கப் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை வேலம்மாள் பள்ளியைச் சார்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் பிரக்னாநந்தா பெற்றார். ஓட்டு மொத்தமாக உலகளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று இராண்டாவது சிறுவன் என்னும் பெருமையையும் பிரக்னாநந்தா பெற்றார். இவர் தனது 12&வது வயதின் 10 மாதங்கள்1 13 நாள்களில் இப்பட்டத்தைப் பெற்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்குரிய மூன்று நிலைகளில் இரண்டு நிலைகளை நிறைவு செய்திருந்த பிரக்னா1நந்தா தற்பொழுது இத்தாலியில ஆர்டிசி நகரில் ஜுன் 16 முதல் 24 வரை நடைபெற்ற 4&வது கிரெனடின் ஒபன் சதுரங்க போட்டியின் எட்டாவது சுற்றில் இத்தாலி வீரர் நூக்கா முரானியை வீழ்த்தி வெற்றிகரமான மூன்றாவது நிலையை றிறைவு செய்து இந்த அரும்பெரும் சாதனையைப் படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts