மாணவர்களின் ஆங்கிலப் புலமை மற்றும் பேச்சாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி புதிதொரு முயற்சியான மேற்கத்திய பாடல் - பட்டறை ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்களின் முழுமையான நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு முறையான மற்றும் அறிவியல் புத்தகச் சிந்தனைகள் பலவற்றை அறிமுகப்படுத்தினர். இந்த அரிய முயற்சி மாணவர்களின் பன்முகத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகளைக் கற்பிப்பதாக அமைந்தது. கற்றல் கற்பித்தலில் அறிவியல் புதுமைகளைப் புகுத்தியுள்ள இந்நிகழ்ச்சி மாணவர்களின் ஆழ்நிலை அறிவாற்றலைத் தூண்டுவதாக அமையும் என்றும் மாணவர்களின் அறிவுத்திறனுக்குச் சவாலாக அமையும் எனவும் ஆசிரியர்கள் உறுதி கூறினர்.
No comments:
Post a Comment