Saturday, May 12, 2018

வேலம்மாள் பள்ளி முன்னாள் மாணவர் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை

சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு நிறைவு செய்த L.மதுபாலன் பொறியியல் பாடப்பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றார். பின்னர் அகில இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் சுமார் 5 லட்சம் தேர்வாளர்களுடன் போட்டியிட்டு அகில இந்திய அளவில் 71-து இடத்தையும் மாநில அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பதை கூற வேலம்மாள் கல்விக் குழுமம் பெருமைப்படுவதோடு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
இது குறித்து மாணவர் மதுபாலன் கூறுகையில் 23 வயதில் அகில இந்திய குடிமைப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றது பள்ளியில்15 எனக்குப் போதிக்கப்பட்ட சுய ஒழுக்கம் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். இத்தேர்வில் மாணவர் மதுபாலன் வெற்றி பெற்றதை பள்ளி நிர்வாகம் வெகுவாக பாராட்டியது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts