சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி.
தண்ணீர் – 1 கப்
சுக்கு பொடி – 1 தேக்கரண்டி
கருப்பட்டி – 1 மேஜை கரண்டி
சுக்கு பொடிக்கு…
உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப்
மல்லி – 2 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
பனங்கற்கண்டு – 3 மேஜைக்கரண்டி
செய்முறை:
முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி!!!
No comments:
Post a Comment