Friday, December 30, 2016

காரம்பாக்கம் போரூர் லயன்ஸ் சங்கம் சார்பாக செட்டியார் அகரம் அரசு பள்ளி மாணவ, மாணவி பயன்பாட்டிற்காக புதிய கழிவரை கட்டிடம் திறக்கப்பட்டது

சென்னை செட்டியார் அகரம் அரசு பள்ளியில் காரம்பாக்கம் போரூர் லயன்ஸ் சங்கம் சார்பாக புதிய கழிவரை கட்டிடம் மாணவ, மாணவி பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. விழாவில் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன்.P.S.V.குமார், துணை ஆளுநர்கள் லயன்.M.சுரேஷ்குமார், லயன்.R.சுரேஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகள் லயன்ஸ் இயக்கத்தின் சேவைகளை பற்றியும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் கலை நயத்துடன் வெளிப்படுத்தி சிறப்பு செய்தனர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பரிசளித்து பாராட்டப்பட்டனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts