Thursday, 25 August 2016

வேலம்மாள் பள்ளியில் ஐரோப்பிய கூடைப்பந்து வீரர்களின் சாகச நிகழ்ச்சி

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் மேலும் ஒரு மைல்கல்லாக மாணவர்களின் கற்றலுடன் கூடிய தனித்திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் பிரிட்டன்ஸ் காட் டேலன்ட் ஷோ என்ற சர்வதேச டங்கிங் டெவில்ஸ் போட்டியில் பங்கேற்று மண்ணில் அல்லாமல் விண்ணில் பறந்து, மலையில் குதித்து, பள்ளத்தாக்குகளில் பாய்ந்து கூடைப்பந்தாட்ட சாகசங்கள் புரிந்து, வெற்றி வாகை சூடிய ஐரோப்பிய நாட்டைச் சார்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் உலகெங்கும் 100 நாடுகளில் பங்கேற்று 10 வருடமாகத் தொடர்ந்து விளையாடி சமூக வலைதளங்களில் 5 மில்லியன் இரசிகர்களைக் கொண்டு 2 மில்லியன் நேரடியான பார்வையாளர்களைக் கொண்டுள்ள ஃப்ரி ஸ்டைல் ஆக்ரோபாடிக் கூடைப்பந்தாட்ட வீரர்கள் இந்திய விளையாட்டுச் சரித்திரத்திலேயே முதன் முறையாக சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 23.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று, காலை 9.30 மணியளவில் சுமார் 1 மணி நேரம் இந்த டங்கிங் டெவில்ஸ் சாகசத்தை நடத்தி E.C.A.Y.L.P.மாணவர்களையும் பள்ளி கூடைப்பந்தாட்ட குழுவையும் ஊக்கப்படுத்தினர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts