சென்னை சின்னமலை - விமான நிலையம் இடையேயான வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இந்த ஆய்வு இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில், சிக்னல்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்தும், ரயிலின் வேகம் குறித்தும் சுதர்சன் நாயக் ஆய்வு நடத்தி வருகிறார். இரண்டாவது நாளாக இன்றும் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, ரயில் சேவைக்கான அனுமதி சான்றிதழ் இன்னும் ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சின்னமலை-விமான நிலையம் இடையேயான ஆகஸ்ட் இறுதிக்குள் ரயில் சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment