Thursday, 28 July 2016

ஆசிய நோபல் பரிசு பெரும் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணன்!

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக சமூக சேவை,அரசுச் துறையில் துணிச்சலாக பணியாற்றும்,கலாச்சார சேவைக்காக ஆண்டுதோறும் வழங்க பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணனுக்கு "சிறந்த தலைமை" என்ற பிரிவின் கீழ் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு போரால் பாதிக்கபட்ட இலங்கையில் பல முறை கர்நாடக இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். சமூகத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு ஆழ்ந்த உருமாற்றும் சக்தியாக இசை இருக்க முடியும் என்று உணர்த்தியவர். ஜாதி பேதமின்றி அனைவருக்கும் கர்நாடக இசையை பயிற்றுவித்து வருகிறார். கலைக்குள் சமூக ஒருமைப்பாட்டை கொண்டு வந்தமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts