Friday, June 10, 2016

மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி

ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி படத்தின் பெரும் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். அவரது ஒளிப்பதிவு துப்பாக்கியின் தரத்தை பல மடங்கு உயர்த்தியது.

ஏ.ஆர்.முருகதாஸும், சந்தோஷ் சிவனும் மீண்டும் இணைகின்றனர்.

முருகதாஸ் மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்குகிறார். மகேஷ்பாபுவின் முதல் நேரடித் தமிழ்ப் படமான இதில் முருகதாஸின் குரு எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

துப்பாக்கி படக் கூட்டணி மீண்டும் இணைவதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts