Friday, 24 June 2016

கறிவேப்பிலையை பச்சையாக உண்பதால் கிடைக்கும் பயன்கள்

நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பையை ஏற்படுத்தும். கறிவேப்பிலையை தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளைக் கரைப்பதுடன், உடல் செயலியல் மாற்றத்தையும் அதிகரிக்கும்.

க‌றிவே‌ப்‌பிலையை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் பரம்பரை நரை முடி ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படாது. கண்பார்வைக் குறைபாடு‌ம் ஏற்படாது. கறிவேப்பிலையை அதிகமாக உட்கொள்ளும்போது. ரோமத்தின் கருமை காக்கப்படும். 

க‌றிவே‌ப்‌பிலையை உணவு பதா‌ர்‌த்‌த‌த்‌தி‌ல் இரு‌ந்தாலே தூ‌க்‌கி எ‌றியு‌ம் பழ‌க்க‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் இரு‌க்கு‌ம் போது, ப‌ச்சை க‌றிவே‌ப்‌பிலையை மெ‌ன்று ‌தி‌ண்ணலா‌ம் எ‌ன்‌கிறா‌‌ர்க‌ள் ஆரா‌ய்‌ச்‌சி ‌நிபுண‌ர்க‌ள். க‌றிவே‌ப்‌பிலை ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்து பல ஆ‌ய்வுக‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளன.

கறிவேப்பிலையில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால், உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் சீராக ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது. அதன் மூலம், உடலில் ரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது. 

கறிவேப்பிலையை அரைத்து ‌விழுதாகவோ அ‌ல்லது சாறு எடு‌த்தோ உ‌ண்டு வ‌ந்தா‌ல் நுரையீரல், இதயம் ம‌ற்று‌ம் ர‌த்த‌ம் தொட‌ர்பான நோய்களே ந‌ம்மை அ‌ண்டாது.

கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவு‌ம். கறிவேப்பிலையை ப‌றி‌த்து பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவ ‌நிபுண‌ர்க‌ள்.
  
ரத்தத்தில் சர்க்கரை அலவை கறிவேப்பிலை குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாகும். அவர்கள் உணவில் கறிவேப்பிலையை தாராளமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts