இந்தியாவில் கவுரவ டாகடர் பட்டம் முதல் திருநங்கை என்ற பெருமையை அக்கை பத்மசாலி பெற்றுள்ளார்.
பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்ததற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக பெங்களூரில் அமைந்துள்ள அமைதி மற்றும் கல்விக்கான பல்கலைக்கழகம் இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை அக்கை பத்மசாலிக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த அக்கை பத்மசாலி தனது 12 வயதில் இரண்டு முறை தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார். 4 வருடங்கள் பாலியல் தொழில் செய்துள்ளார். பின்னர் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பாலியல் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார்.
சமுகத்தில் இவரது குரல் தொடர்ந்து ஒலித்து வந்ததால் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த கவுரவ டாக்டர் பட்டம் எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய பட்டம் கொடுத்து என்னை கவுரவித்த பல்கலைகழகத்துக்கு எனது நன்றி. டாக்டர் பட்டம் எனக்கு வழங்கப்படும் என்று நான் ஒரு நாளும் எண்ணியதில்லை. இந்த டாக்டர் பட்டம் என்னை மேலும் பொருப்புடன் சமுகத்தில் செயல்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. டக்டர் பட்டம் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.
No comments:
Post a Comment