Saturday, May 21, 2016

மெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு

தனியார் மெட்ரிக் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, மே, 30 வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - 2009ன் படி, அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு, எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது; இந்த பிரிவில், மாணவர் சேர்க்கைக்கு நன்கொடையோ, கல்விக் கட்டணமோ கிடையாது;
கல்விக் கட்டணத்தை, தமிழக அரசே அந்த பள்ளிகளுக்கு வழங்கும். இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே, 18 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இது குறித்து, பெரும்பாலான பெற்றோருக்கு தெரியவில்லை. இதையடுத்து, விண்ணப்பங்கள் வழங்கும் தேதியை நீட்டித்து, தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் (பொறுப்பு) ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மே, 30 வரை பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும்; மே, 31 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts