Thursday, May 19, 2016

பிரமிக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்

ஒரு பில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சொகுசு கப்பல் தற்போது பிரித்தானியாவில் இருந்து பயணத்தை தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான Harmony Of The Seas என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பல் தான் தற்போது உலகின் மிகப்பெரிய சொசு கப்பல் என பெயர் பெற்றுள்ளது. 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனத் தினால் கடந்த 32 மாதங்களாக தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நேற்று பிரித்தானியாவில் உள்ள Southampton என்ற துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. ஒரு பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த கப்பலின் நீளம் 1,188 அடி, 215 அகலம் மற்றும் 2,27,000 டன் எடை உடையதாகும். இந்த சொகுசு கப்பலில் 77 நாடுகளை சேர்ந்த 2,100 பணியாளர்கள் உள்ளிட்ட 8,880 பேர் பயணிக்கும் வகையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த கப்பலை தரையில் நிறுத்தினால் பிரான்ஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தை மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான உயரம் கொண்டது. நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள், கேளிக்கை மையங்கள் என பயணிகளுக்கு தேவையான அத்தனை வசதிகளும் இந்த சொகுசு கப்பலில் இடம்பெற்றுள்ளது. உலகையே வியக்க வைத்துள்ள இந்த சொகுசு கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதன் முதலாக நெதர்லாந்து நாட்டிற்கு பயணமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.!

No comments:

Post a Comment

Annanagar Daily posts