Friday, May 13, 2016

பூத் ஸ்லிப், அடையாள அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!

பூத்-ஸ்லிப், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 10-க்கும் மேற்பட்ட மாற்று முறை ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம். பூத்-ஸ்லிப், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள மாற்று முறை ஆவணங்கள்: கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசுகள்-பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் புகைப்படம் ஒட்டப்பட்ட அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்-அஞ்சலகங்கள் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டப்பட்ட சேமிப்பு கணக்குப் புத்தகம், வருமான வரி கணக்கு அட்டை (பான் அட்டை), ஆதார் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேடு அமைப்பு வழங்கியுள்ள ஸ்மார்ட் அட்டை, நூறு நாள் வேலைத் திட்ட அட்டை, மத்திய தொழிலாளர் நலத் துறையின் சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓய்வூதிய ஆவணப் புத்தகம் (புகைப்படம் ஒட்டப்பட்டது) ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts