சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஆபன்கெய்மா என்ற நீல நிற வைரம் ஏலம் விடப்பட்டது. டெலிபோன் மூலம் 20 நிமிட நேரம் ஏலம் நடைபெற்றது. 2 பேர் மட்டும் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். முடிவில் அந்த வைரம் ரூ.380 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
இது ஒருமிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு சோத்பி நிறுவனத்தின் மூலம் நீல சந்திரன் வைரம் (புளூமூன் டயமண்ட்) ரூ.321 கோடிக்கு ஏலம் போனது. இது அதிகபட்ச விலையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. பிலிப் ஆபன்கெய்மிர் என்பவருக்கு சொந்தமான இந்த வைரம் 14.62 காரட் எடையுள்ளது. தற்போது இந்த வைரத்தை ஏலத்தில் எடுத்தவர் யார் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

No comments:
Post a Comment