Thursday, May 19, 2016

பூமியை 1 லட்சம் முறை சுற்றிவந்த சர்வதேச விண்வெளி ஆய்வகம்!

சர்வதேச விண்வெளி ஆய்வகம் பூமியை 1 லட்சம் முறை வட்டமிட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் அனைத்தும் இணைந்து பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை உருவாக்கி வருகின்றன. கடந்த 1998ம் ஆண்டு முதல் விண்வெளி ஆய்வக கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு 2000ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்கள் சென்று தங்கி பணியாற்றி வருகின்றனர். 

6 மாதத்துக்கு ஒரு முறை 3 வீரர்கள் சென்று தங்கி அங்கு கட்டுமான பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை அங்கு 220க்கும் மேற்பட்டோர் சென்று தங்கியுள்ளனர். இந்நிலையில் சர்வதேச விண்வெளி ஆய்வகம் இன்று பூமியை ஒரு லட்சம் முறை சுற்றி சாதனை படைத்துள்ளது. இது 200 கோடியே 60 லட்சம் மைல் தூரம் பயணத்திற்கு சமமாகும். மேலும், செவ்வாய் கிரகத்துக்கு 10 தடவை சென்று வந்ததற்கும், நெப்டியுனுக்கு ஒரு தடவை வந்து சென்றதற்கும் சமமாகும். இந்த தகவலை அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Annanagar Daily posts