தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைக்கும் நோக்குடன், பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கி வருகிறது. பள்ளிகளில் இயங்கும் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் மூலம் இவ்விழிப்புணர்வை சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலைய வளாகங்களில் விநியோகித்து வருகிறது. சென்னை மாவட்ட சூழல் மன்றங்கள் மற்றும் இரயில்வே சரணர் இயக்கம் இணைந்து ஐ.சி.எப். காலனி வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் துணிப்பைகள் விநியோகிக்கும் நிகழ்ச்சியை ஷி.ஸி.தமிழ்செல்வன் வ.உ.சி சாரணர் படை தலைவர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.தங்கராஜ் மற்றும் ஐ.சி.எப் முதுநிலைப் பொறியாளர் ரோட்னிக்ஸ் பிரான்ஸிஸ் முன்னிலையில் தொடங்கி வைத்தார். முன்னதாக கீகீதி சரவணன் மரம் நட்டு, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். சாரண மாணவ மாணவியர், பொது மக்களுக்கு துணிப் பைகளை வினியோகம் செய்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும்படி எடுத்துக் கூறினர். பொதுமக்களும் துணிப்பைகளை பயன்படுத்துவோம் என உறுதியாளித்தனர்.
No comments:
Post a Comment