சென்னை, கீழ்பாக்கம், ஜெ.ஜெ.உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற சர்வதேச 2015-ம் ஆண்டுக்கான கராத்தே போட்டியில் ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் பாரிசாலை எச்.டி.எப் சி. வங்கி எதிரில் அமைந்துள்ள ட்ராகன் ரியோ கராத்தே பள்ளியின் நிறுவனரும், இயக்குனருமான சென்சாய் உதயத்தின் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் கோப்பையை வென்றனர். இதுபற்றி இப்பள்ளி நிறுவனரும், இயக்குனருமான சென்சாய் உதயம் கூறுகையில்: என்னுடைய ட்ராக்கன் ரியோ கராத்தே பள்ளி 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு மிக சிறந்த முறையில் தற்பாதுகாப்பு கராத்தே கலைகளையும், பண்புகள் நிறைந்த நல் ஒழுக்கங்களையும் கற்று கொடுக்கிறேன். ஓவ்வொரு ஆண்டும் அனைத்து கராத்தே போட்டிகளில் நானும், எனது மாணவர்களும் கலந்து கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம் என்றும், பிரபல அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், கல்லூரி தாளாளர்கள் ஆகியோருக்கு மிகச் சிறந்த முறையில் கராத்தே பயிற்சிகள் கற்று கொடுத்தும் வருகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பலதரப்பட்ட நோய்களால் தினந்தோறும் அல்லல்பட்டு, வேதனைப்படும் மக்களுக்காக, மருந்துகள் உண்ணாமலும், கருவிகள் இல்லாமலும், உணவு கட்டுப்பாடு இல்லாமலும், ஓட்டம் மற்றும் நடைபயிற்சி இல்லாமலும் நான் கராத்தே பயிற்சியின் மூலமாகவும், எனது சொந்த ஆராய்ச்சியின் மூலமாக கா-யோ எனும் ஓரு வித்தியாசமான கலையின் மூலமாக பொது மக்களுக்கு கற்று கொடுத்து, சர்க்கரை நோய், ஆஸ்மா, மூட்டுவலி, முதுகுவலி, கழுத்துவலி, நரம்பு தளர்ச்சி, எடை குறைப்பு ஆகிய நோய்களை குறிப்பிட்ட நாட்களில் குணமாக்கி வந்துள்ளேன்.
மேலும் விபரங்களுக்கு 9283120000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படியும் ட்ராக்கன் ரியோ கராத்தே பள்ளி நிறுவனர் சென்சாய் உதயம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment