ஜெ.ஜெ.நகர் கிழக்கு முகப்பேர் 7-எச் பஸ் நிலையம் அருகில் அருள்மிகு நவக்கிரக நாயகி அன்னை கருமாரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. நேற்று 1ம் தேதி ஸ்ரீவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருக்கோவிலிலல் அருளாட்சி செய்துவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப்பெருமாள் சுவாமி சொர்க்கவாசல் தரிசனம் அதிகாலை 4.30மணியளவில் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சியுடன் பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்கதர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா குழுவினர்களும், திருக்கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment