Thursday, 1 August 2013

கேர‌ட்டி‌ன் பய‌ன்பாடு

கேர‌‌ட்டை அ‌திகமாக உ‌ண்பது உடலு‌க்கு ந‌ல்லது. ‌சில குழ‌ந்தைக‌ள் கேர‌ட்டை பொ‌ரி‌த்து‌க் கொடு‌த்தா‌ல் சா‌ப்‌பிட மா‌ட்டா‌ர்க‌ள். அத‌ன் இ‌‌னி‌ப்பு சுவை கார‌த்துட‌ன் ஒ‌த்துவராமல் போவதுதா‌ன் இத‌ற்கு‌க் காரண‌ம்.

‌இத‌ற்கு ப‌திலாக கேர‌ட்டை சூ‌ப்‌பி‌ல் சே‌ர்‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். கேர‌ட், ‌பீ‌ன்‌ஸ், உருளை‌க் ‌கிழ‌ங்கை வேக வை‌த்து ‌மிளகு தூ‌ள் சே‌ர்‌த்து சூ‌ப் செ‌ய்யலா‌ம்.

அவசர‌த்‌தி‌ற்கு கேர‌ட் சாத‌ம் செ‌ய்யலா‌ம். இது சுவையாக இரு‌க்கு‌ம். சூடாக, ஒரு கார வறுவலுட‌ன் கொடு‌த்தா‌ல் ‌குழ‌ந்தைகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

மேலு‌ம், உருளை‌க் ‌கிழ‌ங்கு மசாலா செ‌ய்யு‌ம் போது அதனுட‌ன் கேர‌ட்டையு‌ம் நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு வேக வை‌த்து ம‌சி‌த்து மசாலா செ‌ய்யலா‌ம். சுவையு‌ம் கூடுதலாக இரு‌க்கு‌ம். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

க‌ட்லெ‌ட் செ‌ய்யு‌ம் போது‌ம், ‌பிரெ‌ட் பகோடா செ‌ய்யு‌ம் போது‌ம் அவித்த உருளை‌க் ‌கிழ‌ங்கு‌ட‌ன் கேர‌ட்டையு‌ம் அ‌வி‌த்து‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

குழ‌ந்தைகளுக்கு சாத‌த்‌தி‌ல் கேர‌ட்டை‌ப் போ‌ட்டு வேக வை‌த்து த‌னியாக எடு‌த்து ந‌ன்கு ம‌சி‌த்து ஊ‌ட்டி‌ப் பழகலா‌ம்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts