Thursday, 13 September 2012

''பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் படைப்புகள்'' பற்றிய ஒரு நாள் உரைஅரங்கம்

சென்னை, அண்ணாநகரில் உள்ள  வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியும் சாகித்திய அகாதெமியும் இணைந்து 07.09.12 அன்று வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனருக்கு சிறப்பு செய்து, நினைவு கூறும் விதமாக ''பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் படைப்புகள்'' என்ற தலைப்பில் ஒரு நாள் உரைஅரங்கம் நடத்தியது.

இவ்விழாவில் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியின் தலைவர் அ.ப.மெய்கண்டான், கல்வி கருத்துரைஞர் முனைவர் சா.வளவன்.கல்லூரி முதல்வர் முனைவர் டி.வி.எஸ்.பத்மஜா,புகழ்பெற்ற சாகித்திய அகாதெமியின் தென்மண்டலச்செயலாளர் என்.சி.மகேஷ், ஒருங்கிணைப்பாளர் சிற்பி.பால சுப்பிரமணியம், சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனை பொதுக்குழு உறுப்பினர்கள் இராம.குருநாதன். இந்திரன். இரா.மோகன்,ந.ஆவுடையப்பன் முதலானோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
       

பேராசிரியர் அ.மு.ப வின் படைப்புகள்  தொடர்பான இவ்வுரை அரங்கில் சிற்பி.பாலசுப்பிரமணியம் தலைமை உரையாற்றினார்.அன்னாரின் படைப்புகளில் சமய நூல்கள் குறித்து அரங்க.

இராமலிங்கம் அவர்களும், உரைநடை நூல்கள் குறித்து முத்து.சண்முகம் அவர்களும் தன் வரலாறு தொடர்பான தகவல்களை இரா.மாயாண்டி அவர்களும் பயண நூல்கள் குறித்து க.இராசசேகரன் அவர்களும் உரையாற்றினார்கள்.

சொ.பரமசிவம் அவர்கள் சிறுவர் இலக்கியத்தின் சிறப்பினை எடுத்தியம்பினார்.வெ,நல்லதம்பி அவர்கள் வரலாற்று நூல்களில் அ.மு.ப வின் தனித்தன்மையை விளக்கினார்.முன்னாள் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.ப.அறவாணன் அவர்கள் நிறைவு விழாவில் தலைமை உரையாற்றி அ.மு.பரமசிவானந்தம் அவர்களின் பன்முகத்திறனை உலகிற்கு பறைச்சாற்றும் விதமாக எடுத்தியம்பினார்.


No comments:

Post a Comment

Annanagar Daily posts