Friday, 2 September 2011

வில்லிவாக்கம் திருநகரில் ஜிங்கிள் பெல்ஸ் மாண்டிசோரி பிரி பிளே ஸ்கூல் திறப்பு

அண்ணாநகரை அடுத்த வில்லிவாக்கம் திருநகர் கதவு எண் 14/58&ல் ஆஷா வில்சன் நினைவு அறக்கட்டளை சார்பில் ஜிங்கிள் பெல்ஸ் மாண்டிசோரி பிரி பிளே ஸ்கூல் அமைக்கப்பட்டு உள்ளது- இதன் திறப்பு விழா நேற்று (வெள்ளி) காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் ஷெரோன் அகஸ்டின் வரவேற்று பேசினார். ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிறுவனரும், சேர்மனுமான பத்மசிங் ஐசக் ரிப்பன் வெட்டி பள்ளியை திறந்து வைத்தார்.

முன்னதாக தங்கம் காலனியில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தின் பங்குத்தந்தை ரெவரெண்ட் டாக்டர் மானுவேல் எஸ்.டைடஸ் ஜெபித்தார். விழாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மாண்டிசோரி டீச்சர்ஸ் பயிற்சி பள்ளியின் கோர்ஸ் டைரக்டர் மற்றும் செயலாளர் என்.விஜயா வாழ்த்தி பேசினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஜிங்கிள் பெல்ஸ் மாண்டிசோரி பிரி பிளே பள்ளியின் தாளாளர் ஐடா ராபர்ட் நினைவு பரிசுகளை வழங்கி நன்றி உரையாற்றினார்.

மேலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மாண்டிசோரி ஆசிரியர் பள்ளியின் கோர்ஸ் இயக்குநர் விஜயா  இங்கு செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மாண்டிசோரி டீச்சர்ஸ் பயிற்சி பள்ளிக்கான சான்றிதழை ஐடா ராபர்ட்டிடம் வழங்கினார். தாமஸ் பாலையா நிறைவு ஜெபம் ஜெபித்தார்.

இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை ராபர்ட் வில்சன்,  ஐடா வில்சன், சாம் வில்சன் ஆகியோர் வரவேற்று உபசரித்தனர். இந்த பள்ளியில் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இங்கு குழந்தைகளுக்கு ரைம்ஸ், சாங்ஸ், கிராப்ட்ஸ், கலர், பன் மற்றும் பிளே, கேம்ஸ் ஆகியவை மாண்டிசோரி முறையில் வெகு சிறப்பாக கற்றுத் தரப்படும் எனவும் தற்போது மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் பள்ளியின் தாளாளர் ஐடா ராபர்ட் தெரிவித்து உள்ளார். மேலும் விவரங்களுக்கு 26187455/ 9543657555.

No comments:

Post a Comment

Annanagar Daily posts