அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பாடி புதுநகர் பிரதான சாலையில் அருள்மிகு வரசித்தி விநாயகர், அருள்மிகு மூகாம்பிகை அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் (வியாழன்) விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதை யொட்டி காலையில் கணபதி ஹோமமும், அதை தொடர்ந்து சிறப்பு பூஜையும், பிரசாத விநியோகமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதியம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் உற்சவர் அலங்கார ரதத்தில் பாடி புதுநகர் பிரதான சாலை, தெருக்கள், கலைவாணர் காலனி ஆகிய பகுதிகளில் திருவீதி உலா வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு வரசித்தி விநாயகரை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் எம்.முத்துசாமி சேர்வை, தலைவர் எஸ்.பழனிமுத்து,
செயலாளர் பி.சீனிவாசன், பொருளாளர் ஜெ.ஜெயச்சந்திரன், துணைத்தலைவர்கள் எஸ்.முருகன், பி.பாலன், துணைச் செயலாளர்கள் ஆர்.சம்பத்,கே.ஞானகுருசாமி மற்றும் காப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:
Post a Comment