Friday 30 December 2016

தேசிய அறிவியல் தினக்கொண்டாட்டம்


தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வேலம்மாள் வித்யாலயா, மேல் அயனம்பாக்கம் பள்ளி வளாகத்தில் 24.12.2016 சனிக்கிழமை அன்று அறிவியலே நாட்டின் வளர்ச்சி என்பதைக் கருத்தில் கொண்டு அறிவியல் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்திரனர்களாக டாக்டர்.எஸ்.பாலசுப்பிரமணியன் ஐ.ஐ.டி வேதியியல் பேராசிரியர் அவர்களும், டாக்டர்.செல்வம், அண்ணா பல்கலைக்கழகம் வேதியியல் பேராசிரியர் அவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாணவர்களுக்கு வேதியியல் செய்முறை விளக்கப் பயிற்சியும், இன்றைய கால அறிவியலின் தனிச்சிறப்புகள் பற்றியும் விளக்கப்பட்டது. இதன் வாயிலாக மாணவர்கள் புதிய அறிவியல் உலகத்திற்கே சென்றதாக மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment

Annanagar Daily posts